சாஹோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது ஏன் தெரியுமா?

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது.
பிரபாஸ்
பிரபாஸ்
Published on

பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சாஹோ’. சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. மதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு துபாயில் நடந்தது.

இப்படம் ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் 30-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பின்னணி வேலைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com