வெளிநாட்டில் 4 விருதுகளை குவித்த ராட்சசன்

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் வெளிநாட்டில் 4 விருதுகளை குவித்துள்ளது.
ராட்சசன்
ராட்சசன்
Published on

முண்டாசுப்பட்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம்குமார். இவர் விஷ்ணு விஷால், அமலா பால் ஆகியோரை வைத்து ‘ராட்சசன்’  என்ற படத்தை இயக்கினார். சைக்கோ திரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது.

மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் கலந்துக் கொண்டு பல விருதுகளை பெற்றது. இந்நிலையில் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற திரைப்பட விழாவில் ராட்சசன் படம் கலந்துக் கொண்டது.

இதில் 4 விருதுகளை ராட்சசன் திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த திரில்லர், சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் ராட்சசன் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com