ஹிச்கி படத்தை உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தும் ராணி முகர்ஜி

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி, தான் நடித்த ஹிச்கி திரைப்படத்தை இரண்டு மாதம் நாடு முழுவதும் சென்று விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளார்
ஹிச்கி படத்தை உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தும் ராணி முகர்ஜி
Published on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராணி முகர்ஜி. இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் நடிப்பில் தற்போது ஹிச்கி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. 

ராணி முகர்ஜி இத்திரைப்படத்தில் ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோய்க்குறியைக் கொண்டிருக்கும் நைனா மாதுர் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். 2008ம் ஆண்டு வெளியான "ஹிக்கி பிராட் கோஹன்னின்" புகழ்பெற்ற "ஹால்மார்க்" தொலைக்காட்சி சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ராணி முகர்ஜி "ஹிச்கி" படத்தை இரண்டு மாதங்களுக்குள் இப்படத்தை நாடெங்கிலும் விளம்பரபடுத்த திட்டமிட்டுள்ளார்.

பத்து நகரங்களில் சுற்றுப்பயணம் சென்று நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகளிடம் படத்தை விளம்பர படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெற சவால் நிறைந்த அழகிய செய்தியை முடிந்தவரை பல பார்வையாளர்களுக்கு காட்டவுள்ளது இத்திரைப்படம்.

இப்படம் பிப்ரவரி 23ம் தேதி  வெளியிடப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com