ஒரு வாரத்தில் ரூ.200 கோடி - வசூலை அள்ளும் சஞ்சு

ராஜ்குமார் இரானி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் சஞ்சய் தத்தின் வாழ்க்கைப் படமாக உருவாகி இருக்கும் ‘சஞ்சு’ படம் ரிலீசான ஒரு வாரத்தில் ரூ.200 கோடியை வசூல் செய்து சாதனை படைக்க உள்ளது. #Sanju #RanbirKapoor
ஒரு வாரத்தில் ரூ.200 கோடி - வசூலை அள்ளும் சஞ்சு
Published on

பிரபல நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை கதை ‘சஞ்சு’ என்ற பெயரில் இந்தியில் படமாகி உள்ளது. ராஜ்குமார் இரானி இயக்கியிருக்கும் இந்த படத்தில் சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூரும், அவரது தாய் நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலாவும் நடித்துள்ளனர். 

முக்கிய கதாபாத்திரங்களில் விக்கி கவுசால், சோனம் கபூர், பரேஷ் ரவால், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி ரிலீசாகியது. 6 நாட்களில் படம் ரூ.186.41 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 7-வது நாளான இன்று படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரூ.200 கோடி வசூலின் மூலம் கான் நடிகர்களின் பட்டியலில் ரன்பீர் கபூரும் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சஞ்சு படம் சல்மானின் ரேஸ் 3 படத்தின் வசூலையும் நெருங்கி இருப்பதாக பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஞ்சய் தத்தின் சிறுவயது சம்பவங்கள், சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தது உள்ளிட்ட விஷயங்களை படத்தில் காட்சிப்படுத்தி உள்ளதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இதற்கிடையே படம் இணையதளங்களில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. #Sanju #RanbirKapoor #SanjayDutt

X

Maalai Malar
www.maalaimalar.com