பிக்பாஸ் வீட்டுக்குள் ராணா

இந்தியில் பிரபலான பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் தற்போது தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் பிக்பாஸில் நாளுக்கு நாள் புதுப்புது விஷயங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று ராணா இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் ராணா
Published on

ராணா நடித்துள்ள ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ படத்தை பிரபலப்படுத்துவதற்காக ராணா இந்த வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த படத்தில் வருவது போன்றே வேட்டி அணிந்து சென்றார். அங்குள்ளவர்களுடன் உரையாடிய அவர், நண்பர்கள் தினத்தை அவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

பின்னர் பிக்பாஸ் வீட்டை சுற்றிபார்த்த ராணா, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜுனியர் என்.டி.ஆர். சிறப்பாக நிகழ்ச்சியை தொகுப்பதாக கூறி பாராட்டினார். அன்றைய தினம் வீட்டை விட்டு வெளியேறியவரின் பெயரையும் அறிவித்தார்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி போன்று தெலுங்கு நிகழ்ச்சியிலும் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக ராணா தெலுங்கு பிக்பாஸ் வீட்டில் ஒரு சில மணிநேரம் இருக்க ஏற்பாடு செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com