சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா

மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் `சங்க தலைவன்' படத்தில் டி.வி.தொகுப்பாளினி ரம்யா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
Published on

அடுத்ததாக மணிமாறன் இயக்கத்தில் ‘சங்க தலைவன்’ என்ற படத்தில் நடிக்கிறார். வெற்றி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் சமுத்திரகனி ஜோடியாக டி.வி.தொகுப்பாளினியான ரம்யா ஒப்பந்தமாகி இருக்கிறார். சமுத்திரக்கனியின் மனைவி கதாபாத்திரத்தில் ரம்யா நடிப்பதாக கூறப்படுகிறது. ரம்யா ஏற்கனவே ஓ காதல் கண்மணி, வனமகன் உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைத்தறி தொழிலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கைத்தறி தொழிலாளராகவே சமுத்திரக்கனி நடிக்கிறார். கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com