ரமீஸ் ராஜாவின் அடுத்த படம் `விதி-மதி உல்ட்டா'

`டார்லிங்-2' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமான ரமீஸ் ராஜா அடுத்ததாக `விதி-மதி உல்ட்டா' என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
ரமீஸ் ராஜாவின் அடுத்த படம் `விதி-மதி உல்ட்டா'
Published on

இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் விஜய பாலஜியின் இயக்கத்தில் தற்போது `விதி-மதி உல்ட்டா' என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் விஜய் பாலாஜி இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தில், இவருடன் இணைந்து டேனியல் பாலாஜி, கருணாகரன், செண்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். ஜனனி ஐயர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தபடத்தில் ஜி.வி.பிரகாஷ் கானாபாலா ஒரு பாடலை பாடியிருக்கின்றனர்.

கொடூரமான தாதாவிடம் சிக்கிக் கொள்ளும் தனது குடும்பத்தையும், காதலியையும், ஒரு மிடில்கிளாஸ் பையன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதை தான் இப்படத்தின் திரைக்கதையாக அமைத்திருக்கிறார்கள். இதை காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். தாதாவிடம் மோதும் மிடில்கிளாஸ் பையனாக ரமீஸ் ராஜா நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா வரும் ஜுலை மாதம் நடைபெற இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com