இங்கிலீஷ் படத்தில் தாதாவாக மிரட்டும் ராம்கி

குமரேஷ் குமார் இயக்கத்தில் வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் `இங்கிலிஷ் படம்' படத்தில் நடிகர் ராம்கி தாதாவாக நடித்திருக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலீஷ் படத்தில் தாதாவாக மிரட்டும் ராம்கி
Published on

புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் ராம்கி கதாநாயகனாக நடித்துள்ளார், மீனாட்சி, ஸ்ரீஜா நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி, மதுமிதா, சஞ்சீவ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சாய்சதிஷ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, மகேந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்திற்கு நௌசாத் பின்னணி இசையை உருவாக்கி உள்ளார்.

படம் குறித்து இயக்குநர் குமரேஷ் குமார் கூறியதாவது,

இத்திரைப்படத்திற்கு `இங்கிலிஷ் படம்' என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும். இத்திரைப்படத்தில் நடிகர் ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கிறார். கதைப்படி வடசென்னையின் தாதாவான ராம்கி ஏரியாவில் ஒரு வீட்டை ஏமாற்றி அபகரித்து பல கோடிக்கு விற்பதற்கு முயற்சி செய்கிறார். அந்த வீட்டில் பேய் இருப்பதாக பலராலும் நம்பப்பட, அந்த வீட்டை வாங்க வரும் நபர் வீட்டில் பேய் இல்லை என்று நிரூபித்தால் வீட்டை வாங்கிக் கொள்வதாக சொல்கிறார்.

எனவே பேய் இல்லை என்று உறுதி செய்ய ராம்கி களத்தில் இறங்க அதில் அவர் மிக பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டு யாரும் எதிர்பாராத விதமாக ராம்கியின் மற்றொரு முகம் வெளிப்படுகிறது. அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த ரகளையாக முற்றிலும் காமெடி கலந்த ஹாரர் திரில்லராக இருக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com