

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற 10-ந்தேதி மும்பையில் தொடங்க உள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இதுவிர கீர்த்தி சுரேஷ் ஒரு கதாபாத்திரத்திலும், நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிப்பதாக ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கமாவது, ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்து வெளியாகும் தகவலில் உண்மையில்லை. தற்போது வரை நயன்தாரா மட்டுமே ஒப்பந்தமாகி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். வதந்திகளை பரப்ப வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss #Nayanthara