ரஜினியின் ‘2.0’ படத்தை வெளியிடும் ஆர்யா

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் `2.0' படத்தை நடிகர் ஆர்யா வெளியிடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஜினியின் ‘2.0’ படத்தை வெளியிடும் ஆர்யா
Published on

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுமார் ரூ.400 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் `2.0'. 

ஷங்கர் இயக்கத்தில் இயக்கி இருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக ரசிகர்கள் சந்திப்பின் போது ரஜினி அறிவித்தார். 

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை ஆர்யா கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

2.0 படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை ஆகஸ்ட் சினிமா நிறுவனம் ரூ.16 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெளியீட்டு நிறுவனத்தில் ஆர்யா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தயாரிப்பாளர் ஷாஜி நடேசன் ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com