ராகவா லாரன்ஸின் அடுத்த படம் அதிகாப்பூர்வ அறிவிப்பு

`காஞ்சனா-3' படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் அதிகாப்பூர்வ அறிவிப்பு
Published on

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து, திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'. 

அதனைத் தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. பின்னர் `காஞ்சனா 2' படமும் வெளியாகியது. தற்போது `காஞ்சனா-3' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

லாரன்ஸ் ஜோடியாக இந்த படத்தில் வேதிகா நடிக்கிறார். ஓவியா, நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படம், இந்த ஆண்டு திரைக்கு வருகிறது. 

இந்நிலையில், லாரன்சின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த படத்தையும் லாரன்சே இயக்கி நடிக்க இருக்கிறார். `கால பைரவா' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லாரன்சின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. 

இது தவிர இன்னும் 2 கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கும் லாரன்ஸ், அது குறித்த தகவல்களை மார்ச் மாதம் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com