ஷாமின் கா-வியனுக்கு ராகவா லாரன்ஸ் பாராட்டு

சாரதி இயக்கத்தில் நடிகர் ஷாம் நடித்து வரும் `கா-வியன்' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட நடிகர் ராகவா லாரன்ஸ், படக்குழுவை பாராட்டியிருக்கிறார்.
ஷாமின் கா-வியனுக்கு ராகவா லாரன்ஸ் பாராட்டு
Published on
சாரதி இயக்கத்தில் நடிகர் ஷாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் `கா-வியன்'. 2 எம் சினிமாஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரித்து வரும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் `கா-வியன்' என்றும் தெலுங்கில் `வாடு ஒஸ்தாடு' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
இப்படத்தில் ஷாம் ஜோடியாக ஆத்மியா நடிக்கிறார். ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். என்.எஸ்.ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஷ்யாம் மோகன் இசையமைக்கிறார்.



விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளின் மோஷன் போஸ்டர்களை இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். மோஷன் போஸ்டர், டிரைலரை பார்த்த லாரன்ஸ் படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com