எம்.ஜி.ஆர். வேடம் போட்டு அசத்திய ஆர்.பாண்டியராஜன்

இயக்குனரும் நடிகருமான ஆர்.பாண்டியராஜன் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எம்.ஜி.ஆர். போல் வேடம் போட்டு அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர். வேடம் போட்டு அசத்திய ஆர்.பாண்டியராஜன்
Published on
‘கன்னிராசி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.பாண்டியராஜன். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவே, ‘ஆண்பாவம்’ படத்தை இயக்கி அதில் நடிகராகவும் அறிமுகமானார். இதில் இடம் பெற்ற ‘காதல் கசக்குதய்யா’ பாடல் தற்போதுள்ள இளைஞர்களுக்கும் கூட பிடித்த பாடலாக இருந்து வருகிறது.

கதாநாயகன், குணச்சித்திர வேடம், காமெடியன், வில்லன் என தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர் பாண்டியராஜன். இவர் நடிப்புக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவர் தற்போது சிங்கப்பூரில் நடந்த ஒரு விழாவில், எம்.ஜி.ஆர். வேடம் போட்டு அனைவரையும் அசர வைத்திருக்கிறார். நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், ஒவ்வொருத்தரும் தங்களுக்கு பிடித்தவர்களின் வேடத்தை அணிந்திருக்கிறார்கள். அப்போது, திடீரென பாண்டியராஜன், மேக்கப் அறைக்கு சென்று எம்.ஜி.ஆர். போல் வேடம் அணிந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

இதுகுறித்து பாண்டியராஜன் கூறுகையில், ‘எம்.ஜி.ஆர். அவர்களை நினைத்தாலே பெருமை. அவரைப் போல் வேடம் அணிந்தது நான் செய்த பாக்கியம் என்று கூறியிருக்கிறார்.
X

Maalai Malar
www.maalaimalar.com