பிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் படம் ‘பேவாட்ச்’ ஜுன் 2-ல் தமிழில் ரிலீஸ்

பிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் படமான ‘பேவாட்ச்’ படம் வருகிற ஜுன் 2-ஆம் தேதி தமிழில் ரிலீஸாகிறது.
பிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் படம் ‘பேவாட்ச்’ ஜுன் 2-ல் தமிழில் ரிலீஸ்
Published on

இந்த படத்தை தமிழில் ஹியு பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுகிறது.

பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த `தமிழன்' படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகில் அறிமுகமானார். இந்தியில் பெரிய நடிகையாகி தற்போது ‘பேவாட்ச்’ ஆங்கில படத்தில் நடித்திருக்கிறார். இதில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் வெய்ன் ஜான்சன், ஜாக் எப்ரான், அலெக்ஸான்டர் டட்டாரியோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சேத் கோர்டன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தை உலகமெங்கும் பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இந்த படம் ஹாலிவுட்டில் கடந்த 26-ம் தேதி வெளியானது. இந்தியா முழுவதும் வருகிற ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com