உதயநிதி ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர் - இந்துஜா

அட்லியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஐனாக் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் உதயநிதி ஜோடியாக நடிக்க ப்ரியா பவானி ஷங்கரும், இந்துஜாவும் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. #Udhayanidhi
உதயநிதி ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர் - இந்துஜா
Published on

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நிமிர். யதார்த்தமான கதையாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உதயநிதியின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. அத்துடன் உதயநிதி சினிமா வரலாற்றில் நிமிர் முக்கிய படமாக அமைந்தது. 

இந்நிலையில் உதயநிதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். அதேபோல் இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இந்த இரு படங்களை முடித்த பின்னர், உதயநிதி அடுத்ததாக அட்லியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எனாக் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்த ப்ரியா பவானி சங்கரும், இந்துஜாவும் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரலில் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Udhayanidhi #PriyaBhavaniShankar #Indhuja

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com