பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த பிரசாந்த்

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகர் பிரசாந்த், இந்த வருடம் முக்கிய பிரச்சனைக்காக தனது கொண்டாட்டத்தை தவிர்த்திருக்கிறார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த பிரசாந்த்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் இறுதியாக ‘சாஹசம்’ திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து தற்போது ‘ஜானி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்து வருகிறார்.

மேலும் பிரபு, ஆனந்த ராஜ், அஸ்தோ ராணா, சாயாஜி ஷிண்டே, தேவதர்ஷி, ஜெயக்குமார், கலைராணி, சங்கர், சுரேஷ், டி.வி.புகழ் சந்தியா உள்பட பலர் நடிக்கிறார்கள். வெற்றி செல்வன் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

நடிகர் பிரசாந்த்துக்கு ஏப்ரல் 6ம் தேதி (இன்று) பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும், தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடுவார். ஆனால், இந்த வருடம் தன்னை பார்க்க வந்த ரசிகர்களை திருப்பி அனுப்பி விட்டார்.

தமிழ்நாடு முழுவதும் காவிரி பிரச்சனைக்காக விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பிறந்த நாள் கொண்டாட்டம் முக்கியம் இல்லை என்று கூறி அனுப்பி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com