வீடியோ ஆல்பத்தில் பிரணீதா

தமிழில் உதயன், சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் நடித்த பிரணீதா, பிரபல இயக்குனர் இயக்கத்தில் வீடியோ ஆல்பத்தில் நடித்துள்ளார். #Pranitha
வீடியோ ஆல்பத்தில் பிரணீதா
Published on

திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவரும் திரைப்படங்கள் தாண்டி குறும்படங்கள், இசை ஆல்பங்கள் என தங்களது கருத்துக்களை மக்களுக்கு எளிமையாகச் சென்றடையும் வகையில் தற்போது இயங்கி வருகின்றனர். 

தமிழில் சிம்பு, கவுதம் மேனன், அனிருத் என பலர் தனியாக இசை ஆல்பங்களை உருவாக்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு ஆல்பத்தில் நடிகை பிரணீதா சேர்ந்துள்ளார். 

இவர் தமிழில் உதயன், சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களில் நடித்தவர். நடிகை பிரணீதா சுபாஷ் தற்போது இந்தி இசை ஆல்பத்தில் நடித்து வருகிறார். சான் கித்தன் என்ற இந்த ஆல்பத்தை இந்தியில் சூப்பர் ஹிட்டான துமாரி சுலு படத்தின் இயக்குனர் சுரேஷ் திரிவேணி இயக்குகிறார். 

(இந்தப் படம் தமிழில் காற்றின் மொழி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஜோதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்). சான் கித்தான் ஆல்பத்தில் இந்தி நடிகர் ஆயுஷ்மன் குர்ரானா போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவர் காதலியாக பிரணீதா நடிக்கிறார். குளுமையான பிரதேசங்களில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com