பிரபுதேவாவின் மெர்குரி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன், இந்துஜா நடிப்பில் வசனங்களே இல்லாமல் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `மெர்குரி' படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Mercury
பிரபுதேவாவின் மெர்குரி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
Published on

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `மெர்குரி'.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாத இந்த படம், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. பின்னணி இசையின் மூலமே நகரும் இந்த படத்தில் பிரபுதேவா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியாகி இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மெர்குரி படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

`மெர்குரி' தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்தாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. #Mercury #PrabhuDeva

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com