காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரபுதேவா அடுத்ததாக ஏ.சி.முகில் இயக்கத்தில் முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Prabhudeva #PDinKhaki
காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் பிரபிதேவா நடிப்பில் கடைசியாக வெளியான மெர்குரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. இந்த நிலையில், பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக, `யங் மங் சங்', `லக்‌ஷ்மி' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன.  

தற்போது பிரபுதேவா `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா அடுத்ததாக இந்தியில் படமொன்றை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்படி இருக்கையில், பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கிறார்.

ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் `டிக் டிக் டிக்' படம் ஜுன் 22-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Prabhudeva #PDinKhaki

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com