பொங்கல் ரேசில் பிரபுதேவா

பொங்கல் ரேசில் பிரபுதேவா

சூர்யா, விஷால், விமலை தொடர்ந்து நடிகர் பிரபுதேவாவும் தனது படத்தை பொங்கல் பண்டிகையில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Published on

இந்நிலையில், புதுமுக இயக்குநர் எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் குலேபகாவலி படத்தையும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பிரபுதேவா ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்த படம் கடந்த 1955-ஆம் ஆண்டு டி.ஆர்.ரமணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான குலேபகாவலி படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் பாடல் ஒன்று ரூ.2 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com