பிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் நடிகராக ரீ-எண்ட்ரி ஆகியிருக்கும் பிரபுதேவா நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டே தயாரான `களவாடிய பொழுதுகள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி தாமதமான படம் `களவாடிய பொழுதுகள்'.

காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா - பூமிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 

கடந்த 2010-ஆம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளர் பிரச்சனையால் படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் பிரச்சனைகள் முடிந்ததால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பரத்வாஜ் இசையமைத்திருக்கும் இந்த படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஜெய் - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் பலூன் படமும் டிசம்பர் 29-ஆம் தேதி தான் ரிலீசாக இருக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com