சிம்பு, தனுஷ் வரிசையில் பிரபுதேவா

டான்சர், டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பல துறைகளில் சாதித்த பிரபுதேவா, தற்போது சிம்பு, தனுஷ் வரிசையில் புதிய அவதாரம் எடுத்துள்ளார். #PrabhuDeva
சிம்பு, தனுஷ் வரிசையில் பிரபுதேவா
Published on

சிம்பு, தனுஷ் வரிசையில் பிரபுதேவாவும் பாடலாசிரியராக அவதாரம் எடுத்துள்ளார். டான்சர், டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பல துறைகளில் சாதித்த பிரபுதேவா சமீபகாலமாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் யங் மங் சங்.

பிரபுதேவாவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் தங்கர் பச்சான், ஆர்ஜே.பாலாஜி, சித்ராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.

பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கிறார். முழுக்க காமெடி படமாக உருவாகும் இந்த படத்தை எம்.எஸ்.அர்ஜுன் இயக்க கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் பிரபுதேவா பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com