தெலுங்கு விற்பனையில் சாதனை படைத்த `பொட்டு'

வடிவுடையான் இயக்கத்தில் பரத் - நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியாக இருக்கும் `பொட்டு' படத்தின் தெலுங்கு பதிப்பின் விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது.
தெலுங்கு விற்பனையில் சாதனை படைத்த `பொட்டு'
Published on

வடிவுடையான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் நாயகனாக பரத் நடித்துள்ளார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். மருத்துவக் கல்லூரி பின்னணியில் பேய் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகும் `பொட்டு' படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையாவது என்பது அனைத்து படங்களுக்கு அமைவதில்லை. அந்த வகையில் `பொட்டு' படத்திற்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com