விரைவில் விஜய்யை இயக்குவேன் - பிரபல இயக்குநர் தகவல்

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வரும் நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் திட்டம் இருப்பதாக பிரபல இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார். #Vijay64 #Hari
விரைவில் விஜய்யை இயக்குவேன் - பிரபல இயக்குநர் தகவல்
Published on

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு விஜய் அடுத்ததாக யாருடன் இணையப் போகிறார் என்பது குறித்து ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. 

விஜய்யின் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்குவதாக கூறப்பட்டது. சமீபத்தில் விஜய்யின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் வெற்றிமாறன் தரப்பு அதனை மறுத்துள்ள நிலையில், இயக்குநர் ஹரி விஜய்யை இயக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 

ஹரி தற்போது விக்ரமை வைத்து சாமி-2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். அந்த படம் சிங்கம் சீரிஸ் இல்லை என்றும், அது ஒரு வித்தியாசமான கதை என்றும் கூறியிருக்கும் ஹரி, சூர்யா படத்தை முடித்த பிறகு விஜய்யை இயக்கவிருப்பதாக கூறியிருக்கிறார். 

இதனால் விஜய்யின் 64-வது படத்தை ஹரி இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. #Vijay64 #Hari

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com