பிரபல இந்தி நடிகர் இந்தர்குமார் மாரடைப்பால் மரணம்

சல்மான் கான் படத்தின் மூலம் பிரபலமான இந்தி நடிகர் இந்தர்குமார் மாரடைப்பால் இன்று மும்பையில் மரணமடைந்தார்.
பிரபல இந்தி நடிகர் இந்தர்குமார் மாரடைப்பால் மரணம்
Published on

இந்தி நடிகர் சல்மான் கானின் ‘வாண்டட்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் இந்தர்குமார் (45). இவர் மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வந்தார். இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இவர் ‘கில்லாடி யான்கா கில்லாடி’ ‘அக்னிபாத்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தர்குமார் மறைவுக்கு இந்தி பட உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com