நடிகை கடத்தல் வழக்கில் திருப்பம்: சிக்கும் பிரபல நடிகை

நடிகையை கடத்தி காரில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி பல்சர் சுனில் பிரபல நடிகை பெயரை வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்திருக்கிறார்.
நடிகை கடத்தல் வழக்கில் திருப்பம்: சிக்கும் பிரபல நடிகை
Published on

நடிகையை கடத்தி காரில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரபல ரவுடி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது இதுபோல ஏராளமான வழக்குகள் கேரளாவில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இதை தொடர்ந்து அவரை போலீசார் அந்த வழக்குகளில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிறார்கள். பல்சர் சுனில், தான் கைது செய்யப்பட்டதில் இருந்து இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் பெயர்களை வெளியிடுவேன் என்று மிரட்டி வருகிறார்.

சமீபத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய ‘மேடம்’ பெயரை வெளியிடுவேன் என்று கூறி இருந்தார். அவர், மேடம் என்று குறிப்பிட்டது பிரபல மலையாள நடிகை என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் கோட்டயம் கோர்ட்டுக்கு பல்சர் சுனிலை போலீசார் அழைத்து வந்தபோது, நடிகை கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேடம் எந்த நடிகை என்பதை 16-ந்தேதி (நாளை) வெளியிடுவேன் என்றார். இதனால் யார் பெயரை பல்சர் சுனில் தெரிவிப்பார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com