கொடிவீரனுக்காக மொட்டை போட்ட பூர்ணா

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொடிவீரன்’ படத்திற்காக நடிகை பூர்ணா மொட்டை அடித்துள்ளார்.
கொடிவீரனுக்காக மொட்டை போட்ட பூர்ணா
Published on

இந்த படம் பற்றி சசிகுமார் கூறுகிறார்...

“அண்ணன்-தங்கை பாசம் பற்றிய கதையில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. ‘குட்டிப்புலி’ படத்தில் நடிக்கும் போது, ‘கிராமத்து பின்னணியில் அழகான அண்ணன்-தங்கை கதை ஒன்று தயார் செய்யுங்கள்’ என்று இயக்குனரிடம் கூறி இருந்தேன். அவர் எனக்காக உருவாக்கிய கதை தான் ‘கொடிவீரன்’. இந்த படத்தில் எனது தங்கையாக சனுஜா நடிக்கிறார். காதலியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். ஒரு முக்கியமான பாத்திரத்தில் பூர்ணா நடிக்கிறார். 2 சீனுக்காக மொட்டை போட்டு நடித்தார். படம் வந்த பிறகு பூர்ணா வேடம் பேசப்படும்.

எனக்கு கோவில் விழாவில் குறி சொல்லும் கொடிவீரன் வேடம். தங்கை பேச்சுக்கு மறு பேச்சு பேசாத அண்ணன். இந்த படத்தில் வில்லன் என்று யாரும் கிடையாது. சூழ்நிலையும், கதாபாத்திரங்கள் எடுக்கும் சில தவறான முடிவுகளும் தான் வில்லன். சிவாஜி சாரின் ‘பாசமலர்’ போல இதுவும் அண்ணன்-தங்கை பாசத்தில் உருகவைக்கும் நவீன பாசமலர்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com