20 தடவைக்கு மேல் தற்கொலை எண்ணம் வந்தது - பொன்னம்பலம் வருத்தம்

மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கும் பொன்னம்பலம், 20 தடவைக்கு மேல் தற்கொலை எண்ணம் வந்தது என்று வருத்தத்துடன் பேட்டியளித்துள்ளார்.
பொன்னம்பலம்
பொன்னம்பலம்
Published on

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் கலந்துக் கொண்டார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வந்த பொன்னம்பலம் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, ''நான் நிறைய படங்களில் நடித்தேன், நன்றாக சம்பாதித்தேன், ஆனால், எனக்கென்று எதையும் சேர்த்து வைத்து கொண்டதில்லை. இப்போது எனக்கு கிட்னி பிரச்சனை வந்திருக்கிறது. இந்த தருணத்தில் என்னிடம் இருந்து எல்லாவற்றையும் விற்றுதான் எனது மருத்துவ செலவுகளை பார்த்து வந்தேன். இந்த நிலையில்தான் சரத்குமார் அவர்களிடம் உதவி கேட்டேன். அவரும் உடனே பணம் கொடுத்து உதவினார். அதே போல நடிகர் கமல் எனது குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக கூறியுள்ளார்''.

மேலும் என்னுடன் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் எனக்கு உதவ முன்வர வேண்டும். நடிகர் ரஜினி, சரத்குமார், விஜய், விக்ரம், லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் எனக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும். பணம் இன்றி மருத்துவ செலவுகளுக்காக நான் போராடியது மிகவும் கொடுமையானது. 20-க்கும் மேற்பட்ட முறை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தது. இவ்வளவு நடந்தும் ஸ்டண்ட் யூனியனில் இருந்து யாரும் என்னை பார்க்க கூட வரவில்லை. அது மிகுந்த வருத்தமாக இருக்கிறது'' என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com