பெண்குயின்

அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெண்குயின் படத்தின் முன்னோட்டம்.
பெண்குயின் பட போஸ்டர்
பெண்குயின் பட போஸ்டர்
Published on

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'பெண்குயின்'. அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிரிஷ் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது: "கதை கேட்கும் போது எனக்கு அம்மா வேடம் பற்றி எதுவும் தோன்றவில்லை. இப்போது எல்லாரும் கேட்கும் போதுதான் அம்மா வேடம் பற்றி தோன்றுகிறது. கதை கேட்கும் போது ஏன் பண்ண கூடாது என்றுதான் மனதில் ஓடியது. நான் 10, 15 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கவில்லை. சின்ன குழந்தைக்கு தான் அம்மா வேடமாக நடித்திருக்கிறேன். 

இப்படத்தின் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் புதுமுக இயக்குனர். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. என்னிடம் கதையை 4.30 மணி நேரம் சொன்னார். கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் நினைத்ததை முடித்து காட்டினார். 10 படங்களுக்கு ஒர்க் பண்ண அனுபவம் அவரிடம் இருக்கிறது. அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு" என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com