பவன் கல்யாணை கேலி செய்யும் படம்... இயக்குனர் அலுவலகத்தை நொறுக்கிய ரசிகர்கள்

நடிகர் பவன் கல்யாணை கேலி செய்து திரைப்படம் உருவாக்கி இருக்கும் பிரபல டைரக்டர் அலுவலகத்தை ரசிகர்கள் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.
பவன் கல்யாண்
பவன் கல்யாண்
Published on

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை கேலி செய்யும் வகையில் பவர் ஸ்டார் என்ற படத்தை ராம்கோபால் வர்மா இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத்தில் பவன் கல்யாண் தோற்றத்தில் இருப்பவரை நடிக்க வைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் பவன் கல்யாண் அரசியல் கட்சி தொடங்கி கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததை விமர்சிக்கும் காட்சிகள் இருந்தன.

 இதை பார்த்து பவன் கல்யாண் ரசிகர்கள் ஆவேசமானார்கள். ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ராம்கோபால் வர்மா அலுவலகத்தில் புகுந்து பொருட்களை அடித்து உடைத்து நொறுக்கினார்கள். போலீசார் விரைந்து வந்து 10 பேரை கைது செய்தனர். ரகளை நடந்தபோது ராம்கோபால் வர்மா அலுவலக மாடியில் இருந்ததால் தப்பினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com