தனுஷின் பட்டாஸ் படப்பிடிப்பு நிறைவு

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த பட்டாஸ் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.
பட்டாஸ் படக்குழு
பட்டாஸ் படக்குழு
Published on

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ரிலீசாக உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் சிங்கிள் டிராக்கான “சில் புரோ” பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள டி40 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், தற்போது பட்டாஸ் படப்பிடிப்பையும் தனுஷ் முடித்துள்ளார். இவர் அடுத்ததாக வெற்றிமாறனின் வடசென்னை 2, பரியேறும் பெருமாள் பட புகழ் மாரி செல்வராஜ், ராட்சசன் பட புகழ் ராம்குமார் ஆகியோரது படங்களிலும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com