சுராஜ் இயக்கத்தில் பார்த்திபன் - வடிவேலு மீண்டும் கூட்டணி

சுராஜ் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தில் வடிவேலு ஒப்பந்தமாகி இருந்த நிலையில், தற்போது பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Parthiban #Vadivelu
சுராஜ் இயக்கத்தில் பார்த்திபன் - வடிவேலு மீண்டும் கூட்டணி
Published on

விமல் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மன்னர் வகையறா’ படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. விமல் நடிப்பில் அடுத்ததாக ‘கன்னிராசி’, ‘களவாணி-2’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

விமல் தற்போது எழில் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக சுராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விமலுடன் வைக்கைப் புயல் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மருதமலை பட பாணியில் கலகலப்பாக உருவாகும் இந்த படத்தில் விமல் - வடிவேலு இருவரும் போலீசாக நடிக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் பார்த்திபனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் விமல், வடிவேலுவுடன், பார்த்திபன் இணைந்து நடிக்கும் காட்சிகள் எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Parthiban #Vadivelu

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com