பக்கா

விக்ரம்பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி நடிப்பில் எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பக்கா’ படத்தின் முன்னோட்டம். #VikramPrabhu
பக்கா
Published on

பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவனம் சார்பில் சிவகுமார் தயாரித்துள்ள படம் ‘பக்கா’. இதில், விக்ரம்பிரபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடித்துள்ளனர். சூரி, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்து காளை, சிசர் மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் நடித்துள்ளார்.

எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சி.சத்யா இசை அமைத்திருக்கிறார். யுகபாரதி, கபிலன் பாடல்கள் எழுதியுள்ளனர். கதிர் கலையையும், கல்யாண், தினேஷ் நடனத்தையும் கவனித்துள்ளனர். மிராக்கிள் மைக்கேல் சண்டை காட்சியை அமைத்திருக்கிறார். சசி குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எஸ்.எஸ்.சூர்யா.

“‘காமெடி கலாட்டாவாக இந்த படம் உருவாகி இருக்கிறது. விக்ரம் பிரபு முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும் படமாக ‘பக்கா’ இருக்கும்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர். வருகிற 27-ந்தேதி ‘பக்கா’ திரைக்கு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com