மீண்டும் இணையும் பா.இரஞ்சித் - தினேஷ்

பா.இரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் அட்டகத்தி, கபாலி படங்களில் நடித்துள்ள நிலையில், தினேஷின் அடுத்த படத்தை இரஞ்சித் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Dinesh #PaRanjith
மீண்டும் இணையும் பா.இரஞ்சித் - தினேஷ்
Published on

அட்டகத்தி, கபாலி படங்களை தொடர்ந்து தினேஷ் நடிக்கும் அடுத்த படத்தை பா.இரஞ்சித் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

பா.இரஞ்சித் இயக்குநராக அறிமுகமாகிய அட்டகத்தி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் தினேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில், தினேஷ் நடிக்கும் அடுத்த படத்தை இரஞ்சித் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில், அடுத்த படத்தை தயாரிக்கும் முயற்சியில் இரஞ்சித் இறங்கியிருக்கிறாராம். இந்த படத்தை அதியன் என்ற புதுமுக இயக்குநர் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தினேஷ் நடிப்பில் அண்ணணுக்கு ஜே படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Dinesh #PaRanjith  

X

Maalai Malar
www.maalaimalar.com