அவர் எனக்கு அண்ணன் - பி.சுசீலா

சிவாஜி நடித்த வசந்த மாளிகை படத்தின் டிஜிட்டல் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பி.சுசீலா, அவர் எனக்கு அண்ணன் என்று கூறியிருக்கிறார். #PSusheela
அவர் எனக்கு அண்ணன் - பி.சுசீலா
Published on

எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வெளியிடப்பட்டு வசூலை குவிக்கின்றன. இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.சி.குகநாதன் சிவாஜி நடித்த ’வசந்தமாளிகை’ படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடுகிறார்.

டிஜிட்டலில் ரிலீசாக இருக்கும் `வசந்தமாளிகை’ படத்தின் டிரைலர் நடிகை வாணிஸ்ரீ, பின்னணி பாடகி பி.சுசீலா, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பி.சுசீலா ‘நாங்கள் பாடிய பாடல்களுக்கு சிவாஜி நடித்ததால் தான் எங்களுக்கு புகழ் கிடைத்தது. சிவாஜியும் நானும் அண்ணன் தங்கையாக பழகி இருக்கிறோம். அவர் எனக்கு உடன் பிறவாத அண்ணன். அவர் இருந்து இதை பார்த்து இருந்தால் மிகவும் மகிழ்ந்து இருப்பார். இதில் கலந்துகொள்வது எனக்கு பெருமையான வி‌ஷயம்’. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com