சொர்க்கவாசல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் சொர்க்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.கடந்த நவம்பர் மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சொர்க்கவாசல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
Published on: 

ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் சொர்க்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இந்த படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களத்துடன் அமைந்துள்ளது. இப்படத்தின் கதையை எழுதியவர் தமிழ் பிரபா ஆவார். ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆர் ஜே பாலாஜியின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். செய்யாத குற்றத்திற்காக ஆர் ஜே பாலாஜியை சிறையில் அடைக்கிறார்கள். அங்கு சந்திக்கும் மனிதர்களால் ஏற்படும் பிரச்சனையை பற்றி கதைக்களம் அமைந்துள்ளது.

நடிகை சானியா ஐயப்பன் கதையின் நாயகியாக நடித்து இருந்தார். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

சொர்க்கவாசல் திரைப்படத்தின் விமர்சனத்தை படிக்க இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com