ஓ மை கடவுளே படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ஓ மை கடவுளே படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஓ மை கடவுளே
ஓ மை கடவுளே
Published on

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் காதலர் தினத்தன்று திரைக்கு வந்த படம் ‘ஓ மை கடவுளே’. காதல், பேண்டசி படமான இதை அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது. 

இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஓ மை கடவுளே திரைப்படம் டொரோண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை திரையிடப்படும் என்று படக்குழுவினர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com