ஜெயம் ரவியின் அடுத்த படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

`டிக் டிக் டிக்' படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Published on

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்'. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

ஜெயம் ரவி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே ஜெயம் ரவி புதுமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜகுமார் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். 

ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 

டிசம்பரில் தொடங்கும் இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு மார்ச் வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு ஜெயம் ரவி சங்கமித்ரா பிரமாண்ட படத்தில் நடிக்கவிருக்கிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com