நயன்தாராவுக்காக நிவின்பாலி என்ன செய்கிறார் தெரியுமா?

‘காயங்குளம் கொச்சுண்ணி’ படத்தில் நடித்து வரும் நிவின் பாலி அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் அவருடன் நயன்தாராவும் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்காக நிவின் உடல்எடையை குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NivinPauly
நயன்தாராவுக்காக நிவின்பாலி என்ன செய்கிறார் தெரியுமா?
Published on

மலையான ஹீரோ நிவின்பாலி தற்போது ‘காயங்குளம் கொச்சுண்ணி’ படத்தில் நடித்து வருகிறார். இதை ரோ‌ஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். இதற்காக நிவின்பாலி உடல் எடையை அதிகரித்திருக்கிறார்.

அடுத்து ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மலையாள முன்னணி இயக்குனர் சீனிவாசன் கதை எழுதி இருக்கிறார். இவரது தம்பி தயன் சீனிவாசன் இதை இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக நிவின்பாலி 10 கிலோ எடையை குறைக்க இருக்கிறார். கதைக்கு தேவை என்பதால் இந்த எடை குறைப்பு. இந்த தகவல் மலையாள பட உலகில் பரபரப்பான செய்தியாகி இருக்கிறது.

நயன்தாரா மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் இந்த படத்தை, அஜு வர்க்கீஸ் தயாரிக்கிறார். முக்கிய வேடத்திலும் அவர் நடிக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com