கும்கி-2 படத்தில் இணையும் பிரபல நடிகை
கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
படம் பற்றி இயக்குனர் பிரபுசாலமன் கூறியதாவது..
படப்பிடிப்பு தற்போது மைசூர் அருகே உள்ள சிவ சமுத்திரம் அருவியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த இதயக்கனி படப்பிடிப்பிற்கு பிறகு கும்கி 2 படப்பிடிப்பு தான் அங்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்காக இரண்டு விஷயங்களில் சிரமப்பட்டோம். ஒன்று யானை.. அது கிடைத்து விட்டது. மற்றொன்று படத்தின் நாயகி.. இன்னும் கிடைக்கவில்லை. தேடிக்கொண்டிருக்கிறோம். நாயகி இல்லாத காட்சிகளை மட்டுமே தற்போது படமாக்கி வருகிறோம் என்றார் பிரபுசாலமன். இந்த படத்தில் நடிக்க நிவேதா பெத்துராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். வில்லனாக ஹரிஷ் பேராடியும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.
டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்தை பென் இந்தியா லிமிடெட் சார்பில் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். #Kumki2 #NivethaPethuraj

