பிரியங்கா சோப்ராவுக்கு இவ்வளவு கோடி ரூபாயில் சிறப்பு பரிசா?

பிரியங்கா சோப்ராவின் காதலர் நிக் ஜோனஸ், பல கோடி ரூபாயில் அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளித்திருக்கிறார். #PriyankaChopra #NickJonas
பிரியங்கா சோப்ராவுக்கு இவ்வளவு கோடி ரூபாயில் சிறப்பு பரிசா?
Published on

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் இடையேயான காதல் இந்தி சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியங்காவைவிட பத்து வயது சிறியவர் நிக் ஜோனஸ் என்பதும், இப்போது அவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆக முடிவெடுத்திருப்பதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகு பெவர்லி ஹில்ஸ் பகுதியில் பிரியங்கா நிக் ஆகிய இருவரும் செட்டில் ஆகிறார்கள். இதற்காக, 48 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா ஒன்றினை நிக் விலைக்கு வாங்கியிருக்கிறார். பள்ளத்தாக்கின் சரிவில் கட்டப்பட்டிருக்கும் அந்த வீட்டில் இடம்பெற்றிருக்கும் அத்தனைப் பொருட்களும் தற்போதைய மார்க்கெட்டில் முதல் தரத்தில் இருப்பவையாம்.

ஹாலிவுட்டில் கிடைக்கும் தொடர் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்காவிலேயே இருக்கவேண்டும் என பிரியங்கா முன்பே முடிவெடுத்திருந்தாலும், அவருக்கென தனிப்பட்ட பங்களா அங்கு இல்லை. ஆனால், நிக் ஜோனஸை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த பிறகு, அவர் மூலம் பிரியங்காவுக்கு பரிசாக அளிக்கப்பட்ட பங்களா தான் இது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com