விஸ்வரூபம் 2 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் 10-ல் ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் இன்று மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Vishwaroopam2 #KamalHaasan
விஸ்வரூபம் 2 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
Published on: 

கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் புரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து `சாதி மதம்' என்ற மூன்றாவது சிங்கிளின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கமல்ஹாசன் எழுதிய இந்த பாடலை சத்யபிரகாஷ் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து பாடியுள்ளனர். 

ஜிப்ரான் இசையில் வெளியாகிய `நானாகிய நதிமூலமே', `ஞாபகம் வருகிறதா' உள்ளிட்ட 2 பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan

X

Maalai Malar
www.maalaimalar.com