தள்ளிப்போகும் ஆதித்ய வர்மா.... புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிசய்யா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
துருவ் விக்ரம்
துருவ் விக்ரம்
Published on
விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஆதித்ய வர்மா'.  தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள ஆதித்ய வர்மா படத்தில் துருவ்க்கு ஜோடியாக பனித்தா சந்து நடிக்கிறார். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதான் இசையமைத்துள்ளார்.

ஆதித்யா வர்மா பட போஸ்டர்

இப்படம் நவம்பர் 8-ந் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் நவம்பர் 21-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com