‘கொடிவீரன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் - மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொடிவீரன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கொடிவீரன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

காதல், சென்டிமென்ட், கோபம் என கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சசிகுமாருடன் மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, விதார்த், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இதில் ஒரு முக்கியமான வில்லத்தனம் கலந்த வேடத்தில் பசுபதி நடித்திருக்கிறார்.

சசிகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். 

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வருகிற நவம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அசோக் குமார் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com