சர்வதேச பட விழாவில் விருது வென்ற சில்லுக்கருப்பட்டி

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகிய ‘சில்லுக்கருப்பட்டி’ சர்வதேச பட விழாவில் விருது வென்றுள்ளது.
சில்லுக்கருப்பட்டி படக்குழு
சில்லுக்கருப்பட்டி படக்குழு
Published on

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடந்தாண்டு இறுதியில் வெளியான படம் ‘சில்லுக்கருப்பட்டி’. இது நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளைப் பற்றிக் கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இத்திரைப்படத்தை டிவைன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருந்தார். 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா வெளியிட்டார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜீன், மணிகண்டன், நிவேதிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். 

இந்நிலையில், இப்படம் டொரண்டோவில் நடைபெறும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது. இதனை அப்படத்தின் இயக்குனர் ஹலிதா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். திரைப்பட விழாக்களில் இருந்து இதுபோன்ற விருதுகள் கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இப்படம், கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படத்துக்கான 2-வது பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com