2-வது இன்னிங்சை தொடங்கிய நஸ்ரியா

முதல் இன்னிங்சில் ‘நேரம்’, ‘ராஜா ராணி’, ‘திருமணம் எனும் நிஹ்கா’ ஆகிய படங்களில் நடித்த நஸ்ரியா, அடுத்ததாக 2வது இன்னிங்சை தொடங்கியுள்ளார்.
2-வது இன்னிங்சை தொடங்கிய நஸ்ரியா
Published on

திருமண வாழ்க்கைக்கு பின் உடல் எடை கூடிய நஸ்ரியாவை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்தார்கள். அப்போதும் நஸ்ரியா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. கடுமையான உடற்பயிற்சிக்குப் பின் பழைய நஸ்ரியாவாக திரும்பினார். அவருக்கு நடிப்பதற்கான சரியான தருணமாக அதுவே அமைந்தது.

இந்நிலையில் அவர் மறுபடியும் நடிக்க இருப்பதாக ஒரு தகவலை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதில், “பெங்களூரு டேஸ் படத்தில் நடித்தது முதலே ‘உங்க அடுத்த படம் எது?’ என எல்லோரும் கேட்பார்கள். அதற்கான பதில் இதோ. மீண்டும் நடிக்க வருகிறேன். பிரிதிவிராஜ், பார்வதி நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன். அந்தப் படத்தை அஞ்சலி மேனன் இயக்குகிறார். அவருக்கு என் அன்பு” என பதிவிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com