சொகுசு கார் வாங்கிய பகத் பாசில், நஸ்ரியா... விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இளம் நடிகை

பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடி சமீபத்தில் வாங்கிய சொகுசு காருக்கு எழுந்த விமர்சனங்களுக்கு இளம் நடிகை ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.
நஸ்ரியா - பகத் பாசில்
நஸ்ரியா - பகத் பாசில்
Published on

பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடி போர்ஷ் 911 கேரிரா எஸ் என்ற நவீன காரை வாங்கியுள்ளனர். மணிக்கு 308 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய அந்தக் காரின் ஷோரூம் விலை 1.90 கோடி ரூபாய். பகத் பாசில் தான் வாங்கிய கார் அருகே நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதையடுத்து அவர்களுக்கு பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

ஆனால் மறுபுறம் வழக்கம் போல பலர் அவர்களை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இவ்வளவு விலை கூடிய கார் வாங்கியதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் பலருக்கு உதவியிருக்கலாம் என்று கமெண்ட்கள் எழுந்தன. 

தற்போது மலையாளத்தில் பிரபல இளம் நடிகை அஹானா கிருஷ்ணா இந்த எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். “தங்கள் பொறாமையைத் கட்டுப்படுத்த முடியாதவர்கள், இந்த மாதிரி விஷத்தைக் கக்குகின்றனர். இதுபோன்ற கருத்துகளை இடுகையிடும் நபர்களுக்கு, உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன், அது பொறாமை தவிர வேறொன்றும் இல்லை. மற்றவர்கள் முன்னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைய முயற்சி செய்யுங்கள். தேவையற்ற சூழ்நிலைகளில் உங்கள் வாயை மூடிக்கொள்ள இது உங்களுக்கு உதவும்”என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com