மலையாள படங்களில் ஒப்பந்தமாகும் நயன்தாரா - காரணம் இதுவா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா அடுத்ததாக மற்றுமொரு மலையாள படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். #Nayanthara
மலையாள படங்களில் ஒப்பந்தமாகும் நயன்தாரா - காரணம் இதுவா?
Published on

தமிழ், தெலுங்கு அளவுக்கு மலையாளத்தில் சம்பளம் கிடைக்காது. ஆனாலும் கதாநாயகிகள் தனித்து திறமையை வெளிப்படுத்த முடியும். தமிழில் ஆறு படங்கள் கைவசம் வைத்து நம்பர்-1 நடிகையாக திகழும் நயன்தாரா அடுத்தடுத்து மலையாளத்தில் படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற படத்தில் நடிக்கிறார்.

அடுத்து ‘கோட்டயம் குர்பானா’ என்ற மலையாள படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து மலையாள மார்க்கெட்டை பிடிக்க அவர் திட்டமிடுவதாக தெரிகிறது. 

விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார். எனவேதான் திருமணத்துக்கு பிறகும் கதாநாயகியாகவே நீடிக்க மலையாள படங்கள் பக்கம் கவனம் செலுத்துகிறார் என்கிறார்கள்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இரண்டு ஆண்டுகளாக காதலிப்பதும் இருவருமே அதை உறுதிப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. #Nayanthara

X

Maalai Malar
www.maalaimalar.com