‘இந்தியன்-2’ படத்தில் புரட்சிப் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா?

ஷங்கர் - கமல்ஹாசன் மீண்டும் இணையவிருக்கும் `இந்தியன்-2' படத்தில் ஒரு புரட்சிப் பெண் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #Nayanthara
‘இந்தியன்-2’ படத்தில் புரட்சிப் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா?
Published on

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படம் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கமல் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தை இயக்க ‌ஷங்கர் தயாராகி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியை தைவானில் நடத்தினார்.

கமலின் ‘இந்தியன்-2’ படத்தையும், ரஜினியின் ‘2.0’-வை தயாரித்துள்ள லைகா நிறுவனமே தயாரிக்கிறது. இதுவும் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது.

இந்த படத்தின் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் ஒப்புக் கொண்டால் கமலுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படமாக இது அமையும். ‘இந்தியன்-2’ படத்தில் நயன்தாராவுக்கு புரட்சிப் பெண் வேடம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. வடிவேலுவும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

‘இந்தியன்-2’ படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com