நயன்தாரா நடிக்கும் ஐரா படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

நயன்தாரா நடிக்கும் ஐரா படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

சர்ஜுன்.கே.எம். இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஐரா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. #Airaa #Nayanthara
Published on

லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜூன்.கே.எம். அடுத்ததாக நயன்தாராவை வைத்து ‘ஐரா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் டீசர் ஜனவரி 5-ஆம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். சுதர்ஷன் சீனிவாசன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார்.

படம் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் ரிலீசாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் தவிர்த்து நயன்தாரா அஜித்துடன் ‘விஸ்வாசம்‘, விஜய்யுடன் ‘தளபதி 63’, ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சிரஞ்சீவியுடன் ‘சயீரா நரசிம்மரெட்டி’ மற்றும் மேலும் ஒரு படம், நிவின்பாலியுடன் ‘லவ் ஆக்சன் டிராமா’, ‘கொலையுதிர்க்காலம்‘  உள்பட கை நிறைய படங்களை வைத்திருக்கிறார். #Airaa #Nayanthara #SarjumKM #AiraaTeaser

X

Maalai Malar
www.maalaimalar.com